ADDED : ஆக 08, 2008 07:22 PM

<P>தெய்வம் எங்கோ இல்லை. பத்ரிநாத்திலோ, கேதார்நாத்திலோ, திருப்பதி யிலோ மட்டுமே தெய்வத்தைக் காண முடியும் என்பது வெறும் மூர்க்கபக்தியாகும். தெய்வம் எங்கிருக் கிறது என்றால் நம் இதயத்தில் இருக்கிறது. உன் இதயமே தெய்வத்தின் இருப்பிடம். நிலையற்ற உலகத்தில் அதிகம் படித்து விட்டதாகச் சிலர் கர்வப் படுகின்றனர். சிலர் செல்வம் படைத்து விட்டதாக அகங்காரம் கொள்கின்றனர். இவையெல்லாம் இறைவன் நமக்கு கொடுத்திருப்பதே இல்லாதவர்களுக்குக் கொடுக்கத்தான். அதை உணர்ந்து மற்றவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். சத்தியமாகிய உண்மையைப் பேச வேண்டும். தர்மவழியில் நடக்க வேண்டும். இவ்விரண்டு மட்டுமே பக்திக்கு அடிப்படையானவைகளாகும். இவற்றைக் கொண்டு வாழ்பவன் இறைவழியில் நடப்பவனாகிறான். தெய்வம் எங்கே இருக்கிறது தெரியுமா? சத்யம் இருக்குமிடம் தெய்வம் இருக்கும் இடம். சத்தியமே கடவுள். அன்பே கடவுள். அமைதியே கடவுள் ஆகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மனிதன் தெய்வத்தை தேடி அலைகிறான். நீயே கடவுள்! உனக்குள்ளே இறைவன் உறைந் திருக்கின்றார்! எது நடந்தாலும் இது என் நன்மைக்கே என்ற உயர்ந்த சிந்தனையை மனதில் உருவாக்கிக் கொள்ளுங்கள். எது கிடைத்தாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுங்கள். </P>